மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 2 மே 2021

ஆக்சிஜன் செறிவூட்டி கருவி: இறக்குமதிக்கு அனுமதி!

ஆக்சிஜன் செறிவூட்டி கருவி: இறக்குமதிக்கு அனுமதி!

ஆக்சிஜன் செறிவூட்டி கருவியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, தனிநபர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையால் இந்தியா மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலை மிகப் பெரிய பாதிப்பையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. அதனால், ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவில் அதிகளவில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயாரிக்கப்படாததால், அதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் செறிவூட்டிகளை அவசர தேவைக்காக வரும் ஜூலை 31ஆம் தேதி வரை வெளிநாடுகளில் உள்ள இணையவழி வர்த்தக நிறுவனங்கள் மூலம் வாங்கிக்கொள்ளலாம். பரிசு பொருட்கள் இறக்குமதி என்ற பிரிவின் கீழ் சுங்கத்துறை இதற்கு அனுமதி அளிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் செறிவூட்டி

ஆக்சிஜன் செறிவூட்டி கருவி மூலம் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை அப்படியே நேரடியாக வடிகட்டி பயன்படுத்த முடியும்.

இந்தக் கருவி ஒரு நிமிடத்துக்கு 5 முதல் 10 லிட்டர் வரை ஆக்சிஜனை வழங்குவதால், லேசான பாதிப்புகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளவர்கள், இதன்மூலம் 24 மணி நேரமும் ஆக்சிஜனைப் பெற முடியும். பாதிப்பு அதிகமுள்ளவர்களுக்கு இந்த செறிவூட்டிகளைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில், அவர்களுக்கு நிமிடத்துக்கு 40 - 50 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படலாம்.

ஆக்சிஜன் கருவிகளை நிபுணர்களின் உதவியுடன் நிறுவி, முறையான வழிகாட்டுதலுடன் பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வினிதா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

ஞாயிறு 2 மே 2021