மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

தேர்தல் முடிவுகளை விட கொரோனாவுக்கே முக்கியத்துவம்: டைம்ஸ் நவ்

தேர்தல் முடிவுகளை விட கொரோனாவுக்கே முக்கியத்துவம்: டைம்ஸ் நவ்

அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான எக்சிட் போல் முடிவுகளை ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட்ட டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி ஊடகம், “மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகளைப் பற்றிய சிறப்பு கவரேஜ் எதையும் செய்யப் போவதில்லை. தேசிய சுகாதார அவசர நிலையை ஒட்டி இந்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது”என்று அறிவித்துள்ளது.

இன்று (மே 1) டைம்ஸ் நவ் ட்விட்டர் பதிவில்,

“ நேயர்களே... தற்போது நமது நாடு மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை எதிர்கொள்கிறது. டைம்ஸ் நவ் இப்போது நாட்டின் மிக முக்கியமான பிரச்சினையான கொரோனா தொற்று பரவல் பற்றிய செய்திகளுக்கே முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளது. எனவே மே 2 ஆம் தேதிய தேர்தல் முடிவுகள், அதன் பிறகான அரசியல் மாற்றங்கள் குறித்த சிறப்பு கவரேஜ் செய்திகளை நிறுத்திவைக்கிறோம்” என்று டைம்ஸ் குழு சேனல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில், “எங்கள் கவரேஜின் முக்கிய அம்சமாக பார்வையாளர்கள் கொரோனா தொடர்பான செய்தி அறிக்கைகளை எதிர்பார்க்கலாம், உலகளாவிய தடுப்பூசி இயக்கத்தின் நிலை, ஹெல்ப்லைன்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சேனலில் சுகாதார மற்றும் மன நல நிபுணர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.. அதேநேரம் சிறப்புத் தேர்தல் ஒளிபரப்பை மட்டுமே நிறுத்துகிறோம். டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனல் அதன் வழக்கமான செய்தி நிகழ்ச்சிகளின் போது தேர்தல் முடிவுகளை ஒளிபரப்பும். தேர்தல் நடத்தப்பட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவுகளைத் தேடும் எங்கள் பார்வையாளர்களுக்கு, நாங்கள் வழக்கமான செய்தி அப்டேட்டுகளை தெரிவிப்போம். ஆனால் சிறப்பு கவரேஜ் கிடையாது.”என்று டைம்ஸ் நவ் குழுமம் தெரிவித்துள்ளது.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 1 மே 2021