’தடுப்பூசி எங்கடா’: வைரலாகும் நடிகர் சித்தார்த் ட்வீட்!

politics

இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தடுப்பூசி திட்டம் தொடங்கப்படாதது குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா முழுவதும் இன்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தடுப்பூசி போட ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,” தமிழகத்தில் போதுமான அளவு தடுப்பூசி இல்லை. அதனால், திட்டமிட்டப்படி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடியாது. ஆனால், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடரும்” என தெரிவித்திருந்தார். தமிழகம் மட்டுமில்லாமல், பல மாநிலங்களிலும் இந்த தடுப்பூசி திட்டம் தொடங்கப்படவில்லை.

நடிகர் சித்தார்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநில முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு ட்வீட்டை பதிவு செய்திருந்தார். அதற்கு அவர் மீது வழக்கு பதிவு செய்ததைத் தாண்டி, அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பாஜகவினர் போன் மூலமாக பாலியல், கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் சித்தார்த் தெரிவித்திருந்தார். ஆனால், சித்தார்த்துக்கு பலரும் ஆதரவு தெரிவிக்கும்வகையில் #IStandWithSiddharth என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.

தற்போது, நடிகர் சித்தார்த் மீண்டும் தனது டுவிட்டர் பக்கத்தில் ’தடுப்பூசி எங்கடா டேய்? என பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கமென்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.’ Vaccine enga da dei?’ என்ற ஹேஷ்டேக் தற்போது வைரலாகி வருகிறது.

மற்றொரு ட்வீட்டில், “இந்த வருடத்தின் இறுதியில் கொரோனாவுக்கு எதிரான மாத்திரைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது. உண்மையிலேயே இது வரவேற்கத்தக்க ஒன்று. இருப்பினும் நாம் அனைவரும் தடுப்பூசியை விரைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் தடுப்பூசிகளே இல்லாமல் எப்படி தடுப்பூசி போட்டுக்கொள்வது? தடுப்பூசிகள் எங்கே? என பதிவிட்டுள்ளார்.

**வினிதா**

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *