மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

ஆபூர்வா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு!

ஆபூர்வா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு!

உயர்கல்வித்துறை செயலாளர் செல்வி அபூர்வா பள்ளிக்கல்வித்துறை செயலாளராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டுத்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தீரஜ் குமாரை விடுப்பில் இருக்கும்படி, தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தீரஜ் குமார் பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் செல்வி ஆபூர்வா ஐஏஎஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா பள்ளிக்கல்வித்துறை செயலாளராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக துணைவேந்தர் சூரப்பா பதவி காலம் முடிவடைந்த நிலையில், துணைவேந்தர் பணிகளை மேற்கொள்ள, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா ஒருங்கிணைப்பாளராகவும், தொழில்நுட்பத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அபிமன்யு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

சனி 1 மே 2021