மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

நேற்று டாஸ்மாக்கில் அமோக விற்பனை!

நேற்று டாஸ்மாக்கில் அமோக விற்பனை!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் நேற்று மட்டும் ரூ.292 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் திறந்திருக்கும் நேரத்தில் ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது, டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டது.

மே 1அரசு விடுமுறை தினம் என்பதாலும், நாளை வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யவும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதால், நேற்றே மது பிரியர்கள், கடைகளில் குவிந்து விட்டனர்.

நேற்று (ஏப்ரல் 30) ஒரே நாளில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.292.09 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.63.44 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.59.63 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.56.72 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.56.38 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.56.37 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை(ஏப்ரல் 25) அன்றுமுழு ஊடரங்கு கடைபிடிக்கப்பட்டபோது, அதற்கு முந்தைய நாளில் ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகத்தில் ரூ.252.48 கோடிக்கு மது விற்பனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

சனி 1 மே 2021