மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

18+ தடுப்பூசி : 6 மாநிலங்களில் தொடக்கம்!

18+ தடுப்பூசி : 6 மாநிலங்களில் தொடக்கம்!

நாடு முழுவதும் இன்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறு மாநிலங்களில் மட்டுமே இன்று தடுப்பூசி திட்டம் தொடங்கியுள்ளது.

நாட்டில் அதிவேகத்தில் பரவி வருகிற கொரோனா பரவலை கட்டுப்படுத்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் கொரோனா தடுப்பூசிதான். அதனால், மத்திய அரசு இந்த திட்டத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. ஆனால், விரிவுப்படுத்தும் அளவுக்கேற்ப மாநிலங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை.

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்த மத்திய அரசு, அதற்கு முன்பதிவு செய்திருப்பது கட்டாயம் என அறிவித்தது. இதையடுத்து கடந்த 28 ஆம் தேதி கோவின் இணையதளத்தில் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு செய்து வருகின்றனர்.

ஆனால், பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால், இந்த தடுப்பூசி திட்டம் தொடங்கப்படவில்லை. மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஓடிசா,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி திட்டமிட்டப்படி தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிராவுக்கு மூன்று லட்ச கோவிஷீல்டு தடுப்பூசிகளும், ஓடிசா,சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு தலா ஒன்றரை லட்சம் தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 7 மாவட்டங்களிலும், ராஜஸ்தானில் 3 மாவட்டங்களிலும், குஜராத்தில் 10 மாவட்டங்களிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு சில இடங்களில் மட்டுமே தடுப்பூசி முகாம்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

சனி 1 மே 2021