மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

‘#ArrestPChidambaram’: ட்விட்டரில் கிளம்பும் எதிர்ப்பு!

‘#ArrestPChidambaram’: ட்விட்டரில் கிளம்பும் எதிர்ப்பு!

இந்தியாவில் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு பொய் சொல்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறிய கருத்துக்கு ட்விட்டரில் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நாட்டில் இரண்டாவது கொரோனா அலை வேகமாகப் பரவி வருவதால், அதிகமான மக்கள் பாதிப்படைகின்றனர். மேலும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி, தடுப்பூசி உள்ளிட்டவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகளுக்காக மக்கள் அங்கும் இங்கும் அலைகின்றனர். ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதுகுறித்தான பதிவுகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொருவிதமான சிக்கலை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு குறித்து அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அதுபோன்று, காங்கிரஸின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆக்சிஜன், தடுப்பூசி கையிருப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் அவர் வெளியிட்ட கருத்துகள் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. ப.சிதம்பரம் ட்விட்டரில் கடந்த 29ஆம் தேதி, “மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், அவரது அரசும் மாநிலங்களில் தடுப்பூசி போதுமான அளவு இருப்பில் இருப்பதாகத் தெரிவித்து வருகிறது. மே 1 அன்று தொடங்கக் கூடிய 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் எந்த மாநிலங்களிலும் தொடங்கப்படுவது போன்று தெரியவில்லை. காரணம், தடுப்பூசி பற்றாக்குறை. இது தொடர்பாக அனைத்து தொலைகாட்சிகளும் போலியான காட்சிகளை ஒளிபரப்புகின்றனவா? அனைத்து பத்திரிகைகளும் தவறான செய்திகளை வெளியிடுகின்றனவா? அனைத்து மருத்துவர்களும் பொய் சொல்கின்றனரா? மே 1ஆம் தேதி தடுப்பூசி மையங்களில் இருந்து மக்கள் தடுப்பூசிகள் இல்லை என்று திரும்பி வந்தால், ஹர்ஷவர்தன் பதவி விலகுவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் “மக்களை முட்டாள்களாகக் கருதும் மோடி அரசுக்கு எதிராகப் புரட்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் ட்வீட் செய்து இரண்டு நாட்கள் ஆனாலும், நேற்றுதான் அதிகமானோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரீட்வீட் செய்துள்ளனர்.

மக்களிடம் கிளர்ச்சியைத் தூண்டும் விதமாக பேசிய சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து ட்விட்டரில் #ArrestPChidambaram என்னும் ஹேஸ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.

வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

சனி 1 மே 2021