மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

வீட்டிலேயே குப்புறப் படுத்துக்கொள்ளுங்கள்: மத்திய அரசு ஆலோசனை!

வீட்டிலேயே குப்புறப் படுத்துக்கொள்ளுங்கள்: மத்திய அரசு ஆலோசனை!

நாடு முழுதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் பலருக்கு அட்மிஷன் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஒப்புக்கொள்வது போல, லேசான கொவிட்-19 அறிகுறிகளை வீட்டிலிருந்தே சமாளிப்பதற்கான, தகவல்கள் மற்றும் குறிப்புகளை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

நேற்று (ஏப்ரல் 30) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள அந்தக் குறிப்புகளில்,

“சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம், கொரோனா பாதிப்பை பலரால் வீட்டிலிருந்தே சமாளிக்க முடியும் என்பதால், கொரோனா அறிகுறிகள் எதுவும் ஏற்பட்டால் பீதியடைய வேண்டாம்.

முதல் முறையாக அறிகுறிகளை உணரும் போது, மக்கள் தங்களை வீட்டில் தனிமை படுத்திக் கொள்ள வேண்டும்.

தொற்று ஏற்பட்டால், உடலில் உள்ள இயற்கையான எதிர்ப்பு சக்தி, பாதிப்பை எதிர்த்து போராடும் என்பதால், மக்கள் கொரோனா தொற்று ஏற்பட்டால் கவலையோ, பீதியோ அடைய வேண்டாம்.

தொற்று ஏற்பட்டால், தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வு எடுப்பது முக்கியம். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து நோயாளியின் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, வெப்ப நிலை ஆகியவற்றை தவறாமல் கண்காணிக்க வேண்டும்.

காய்ச்சல் தொடர்ந்தால், அல்லது ஆக்ஸிஜன் அளவு SpO2, 92 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தால், மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். நுரையீரலுக்குள் ஆக்ஸிஜன் செல்லும் அளவை அதிகரிக்க, குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், முதுகுத் தண்டுப் பிரச்சினை இருப்பவர்கள், இதய பிரச்சினை இருப்பவர்கள் இதுமாதிரி செய்ய வேண்டாம் என்றும் அந்த குறிப்பில் எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

நோயாளி இருக்கும் இடத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்திருக்க வேண்டும்”என்று இந்தக் குறிப்புகள் கூறுகின்றன.

மேலும், தொற்று பரவலை குறைக்க, தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த வழிகாட்டி குறிப்பு எடுத்துக் கூறுகிறது.

மருத்துவக் கட்டமைப்புகள் நிறைந்த தமிழகத்திலேயே நிலைமை மே முதல்வாரம் வரைதான் தாங்கும், அதன் பின் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழியும் என்று எச்சரிக்கைத் தகவல்கள் வருகின்றன.

ஏற்கனவே தமிழகத்தில், “அடுத்த 10 நாட்களில் சாதாரண அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டும் என தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். தமிழகத்தில் 50 சதவீதம் பேர் வீட்டுத்தனிமையிலும், 30 சதவீதம் பேர் மருத்துவமனையிலும், 10 சதவீதம் பேர் கொரோனா பராமரிப்பு மையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் 12 ஆயிரத்து 468 படுக்கைகள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதி வரை 3,329 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது”என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வட இந்தியாவில் தமிழகத்தை விட பல மடங்கு நிலைமை மோசமாகியிருப்பதாக செய்திகள் வரும் நிலையில்... மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவதைத் தவிர்க்கும்படியும் இந்த குறிப்புகள் கூறுகின்றன.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 1 மே 2021