மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 மே 2021

தடையை மீறினால் கடும் நடவடிக்கை!

தடையை மீறினால் கடும் நடவடிக்கை!

ஈரோட்டில் இன்று தடையை மீறி மீன், இறைச்சி கடைகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்படுவதால், சனிக்கிழமை மீன்,இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம அலைமோதுகிறது. அதுமட்டுமிலலமல், தடுப்பு வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. அதனால், இனி சனிக்கிழமைகளிலும் மீன், இறைச்சி கடைகளை திறக்கக் கூடாது என தமிழக அரசு கடந்த வாரத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் முதல் சனிக்கிழமையான இன்று(மே 1) அனைத்து மீன், இறைச்சி கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் அனைத்து வகையான இறைச்சி கடைகளும் மூடப்பட்டிருக்கும்.

இந்த தடை உத்தரவை மீறி மாநகராட்சியில் எங்கேயாவது இறைச்சி கடைகள் செயல்படுவது தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாநகர் பகுதியில் அரசு அலுவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதுபோன்று, தமிழகம் முழுவதும் இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 1 மே 2021