மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

படுக்கை வசதி : தமிழக அரசின் ட்விட்டர் கணக்கு!

படுக்கை வசதி : தமிழக அரசின் ட்விட்டர் கணக்கு!

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி பெற, 104GoTN என்ற புதிய ட்விட்டர் கணக்கை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதால், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இல்லை என மக்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு 104_GoTN என்ற புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்யும் சிறப்பு மையமாக இது செயல்படும். இதன்மூலம் படுக்கை வசதி தேவைப்படுவோர் ட்விட்டரில் பதிவிடலாம்.

படுக்கை வசதிகளை ஒருங்கிணைக்க ஒருங்கிணைந்த கட்டளை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 104 என்ற எண் மூலம் தொடர்புக் கொண்டு பொதுமக்கள் படுக்கை வசதி குறித்துக் கேட்டறியலாம். அதுபோன்று, தனியார் மருத்துவமனைகளும், இந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இந்த மையம், 24 மணி நேரமும் தமிழக அரசின் படுக்கை மேலாண்மையை இணையம் வழியாகக் கண்காணித்து, தேவைக்கேற்ப நோயாளிகளைப் பிரித்து, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும். மக்கள் மத்தியில் இந்த ட்விட்டர் கணக்கை பிரபலப்படுத்த #BedsForTN என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் எந்த மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ள stopcorona என்ற இணையதளத்தை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

வெள்ளி 30 ஏப் 2021