மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

தொண்டர்களை தலைவர்கள் கட்டுக்குள் வைக்க வேண்டும்!

தொண்டர்களை தலைவர்கள் கட்டுக்குள் வைக்க வேண்டும்!

கொரோனா பரவலைத் தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகளை பின்பற்றி அரசியல் தலைவர்கள் ஒரு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா எனும் பெருந்தொற்றுக்கு மத்தியில் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிவடைந்த நிலையில், அதே சூழலில் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பான வழக்கொன்றில் கொரோனா பரவலின் தற்போதைய நிலைக்கு தேர்தல் ஆணையமே காரணம் என குற்றம்சாட்டிய சென்னை உயர் நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையின்போது சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கபடாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று(ஏப்ரல் 30) தலைமை நீதிபதி அமர்வு முன்பு நடந்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம், தமிழக அரசு ஆகியோர் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், திருப்தி அளிப்பதாக தெரிவித்தனர்.

மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது தொண்டர்களை தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மே 2ஆம் தேதி பட்டாசுகள் வெடிக்கக் கூடாது, இனிப்பு வழங்கக் கூடாது, வெற்றி கொண்டாட்டங்கள் இருக்கக் கூடாது, ஊர்வலம் செல்லக் கூடாது. இதுபோன்ற கொண்டாட்டங்கள் நடைபெறாமல் இருப்பதை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை கடைபிடிப்பதில், அரசியல் தலைவர்கள் முன்மாதிரியாக திகழ வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முகவர்கள், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை, வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூட தடை, வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையமும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வெள்ளி 30 ஏப் 2021