மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

சிறப்பு டிஜிபி வழக்கு: 6 வாரத்திற்குள் முடிக்க உத்தரவு!

சிறப்பு டிஜிபி வழக்கு: 6 வாரத்திற்குள் முடிக்க உத்தரவு!

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் தொல்லை வழக்கை 6 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தமிழக சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுகுறித்தான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. விசாகா கமிட்டியும் ராஜேஷ்தாஸிடம் விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறார்.

இந்நிலையில், இன்று(ஏப்ரல் 30) நடந்த வழக்கு விசாரணையின்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, இந்த வழக்கில் இதுவரை 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 30 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, ஏற்கனவே இதுகுறித்தான அறிக்கையை விசாகா கமிட்டி அரசிடம் சமர்ப்பித்துவிட்டது. தற்போது அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை முடிக்க எத்தனை நாட்கள் தேவைப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, 4 முதல் 8 வாரங்கள் ஆகும் என விசாரணை அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு டிஜிபி மீதான வழக்கை ஆறு வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும். அரசிடம் அனுமதி பெற்று சம்பந்தபட்ட நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வெள்ளி 30 ஏப் 2021