மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

கொரோனா: கேள்விகளை அடுக்கிய உச்ச நீதிமன்றம்!

கொரோனா:  கேள்விகளை அடுக்கிய உச்ச நீதிமன்றம்!

கொரோனா தடுப்பூசிக்கான விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள தடுப்பூசி, ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை இன்று(ஏப்ரல் 30) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எல் நாகேஸ்வர ராவ் மற்றும் ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இன்று நடந்த விசாரணையில் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து திட்டம் இருக்கிறதா?, ஆக்சிஜன் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது? மருத்துவ உபகரணங்கள் இருப்பில் உள்ளதா? என நீதிபதிகள் சரமாரியாக மத்திய அரசிடம் கேள்விகளை வைத்தனர்.

”மத்திய அரசுக்கு ஒரு விலையிலும், மாநில அரசுக்கு ஒரு விலையிலும் தடுப்பூசி விற்பனை செய்யப்படுவது ஏன்? ஏழை மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் விதமாக தேசிய அளவிலான பொதுத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில், அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கொரோனா தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயித்தால் சமநிலைத்தன்மை இருக்காது. அதனால், மத்திய அரசே தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்” என தெரிவித்தனர்.

மாநிலங்களுக்கு எந்த அளவின் அடிப்படையில் ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுகிறது. சப்ளை செய்யப்பட்ட ஆக்சிஜன் மக்களை சென்றடைந்துவிட்டது என்பதை எவ்வாறு உறுதி செய்வது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

”நாட்டு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஏதேனும் உதவி கோரினால் அவர்களை அடக்கவோ, அவர்கள் வெளியிடும் தகவலை மறைக்கவோ கூடாது. அதாவது ஆக்சிஜன் பற்றாக்குறை , தடுப்பூசி தட்டுப்பாடு மருத்துவர்கள், படுக்கைகள் பற்றாக்குறை என்று மக்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களைத் தெரிவித்தால் , அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. மத்திய அரசும், மாநில அரசுகளும், அனைத்து மாநில காவல் டிஜிபிகளும் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்தால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்” என நீதிபதிகள் எச்சரித்தனர்.

இந்த கொரோனா காலத்தில் ஓய்வே இல்லாமல் வேலை பார்த்து கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அதிகளவில் சம்பளம் கொடுக்க வேண்டும். அது அரசு மருத்துவமனை ஊழியர்களோ, தனியார் மருத்துவமனை ஊழியர்களோ, யாராக இருந்தாலும் சரி என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உருமாறிய கொரோனாவை அறிவியல்பூர்வமாக கண்டறிவதில் என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளனர்? கொரோனா கட்டுக்குள் கொண்டுவர உள்ள செயல்திட்டங்கள் என்னென்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 30 ஏப் 2021