மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

கொரோனா: தரவுகளை மூடி மறைப்பதா? மோடிக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

கொரோனா: தரவுகளை மூடி மறைப்பதா? மோடிக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

கொரோனா தொற்று இந்தியாவில் உச்சத்தைத் தொட்டுவிட்ட நிலையில், சுமார் 100 விஞ்ஞானிகள் சேர்ந்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக இன்று (ஏப்ரல் 30) தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

உயிரியலாளர்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களின் நோய் மாதிரியாக்கம் மற்றும் மரபணு வரிசைப்படுத்துதலில் வல்லுநர்கள் உள்ளிட்ட இந்த நூறு பேரும் பிரதமர் மோடியிடம் முக்கியமான ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர்.

“இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் புள்ளி விவர வங்கியை (data bank) மேம்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐ.சி.எம்.ஆர் தரவுத்தளம் அரசாங்கத்திற்கு வெளியே உள்ள எவரும் அணுக முடியாத நிலையில் இப்போது உள்ளது. அரசாங்கத்திற்குள் இருப்பவர்களுக்குக் கூட ( பெரும்பாலான விஞ்ஞானிகள் - இந்தியாவுக்கான புதிய முன்கணிப்பு மாதிரிகளை உருவாக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை விஞ்ஞானிகள்) இந்த தரவுகளை அணுக முடியாத நிலையே தற்போது உள்ளது.

ஒவ்வொரு நாளும் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா தொற்றுகள் ஏற்பட்டு வரும் நிலையில்,அரசாங்கமும் அதன் விஞ்ஞானிகளும் கண்மூடித்தனமாக இருந்தார்களா என்ற கேள்விகள் உலக அரங்கில் எழுப்பப்படுகின்றன.

துல்லியமாக முன்கணிப்பு மற்றும் அளவீடுகளுக்கு, ஆக்ஸிஜன், மருத்துவ பொருட்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் ஐ.சி.யூ படுக்கைகளுக்கான தேவைகளை மதிப்பிடுவதற்கு உண்மையான மருத்துவ தரவுகள் கிடைக்க வேண்டியது அவசியம்”என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கையொப்பமிட்டவர்களில் இந்திய அறிவியல் அகாடமியின் தலைவர்; அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் உயிரியல் அறிவியல் தேசிய மையத்தின் மூத்த விஞ்ஞானிகள் ஆகியோர் அடங்குவர்.

“கொரோனா வைரஸின் மரபணு-வரிசைப்படுத்துதலின் அடிப்படையில் பெரிய அளவிலான கண்காணிப்புத் தரவைச் சேகரிப்பதற்கும், இந்தத் தரவை பொது களத்தில் விரைவாக வெளியிடுவதற்கும் போதுமான நிதி மற்றும் அமைப்புகளின் வலையமைப்பை விரிவுபடுத்த வேண்டும். இதைச் செய்யாமல் கொரோனாவை இந்தியாவில் கட்டுப்படுத்துவது கடினம்” என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: விலைபோய் விடாதீர்கள்-கமல் உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  விலைபோய் விடாதீர்கள்-கமல்  உருக்கம்!

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

12 நிமிட வாசிப்பு

முருகன் மேல் பாசம் உண்டு: மணமேடையில் ஸ்டாலின் சிலேடை!

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

வெள்ளி 30 ஏப் 2021