மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

கொங்கு நாடு - பாண்டிய நாடு: அதிமுகவைக் கலக்கும் எக்சிட் போல் முடிவுகள்!

கொங்கு நாடு - பாண்டிய நாடு: அதிமுகவைக் கலக்கும் எக்சிட் போல் முடிவுகள்!

ஏப்ரல் 29ஆம் தேதி வெளியான எக்சிட் போல் முடிவுகள் அனைத்திலுமே தமிழகத்தில் திமுகதான் ஆட்சியமைக்கும் என்று உறுதிபட தெரிவித்திருக்கின்றன.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலும் இதே போல பல்வேறு எக்சிட் போல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக வந்தபோதும் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்தன. ஆனால் அன்றைய 2016 தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை சி ஓட்டர்ஸ் நிறுவனத்தின் எக்சிட் போல் முடிவுகள் தேர்தல் முடிவுகளோடு பெரும்பாலும் பொருந்தின.

இந்த வகையில் இந்த 2021 தேர்தலில் ஏ பி பி - சி ஓட்டர்ஸ் நிறுவனத்தின் எக்சிட் போல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஏ பி பி - சி ஓட்டர்ஸ் நிறுவனத்தின் 2021 தமிழ்நாடு எக்சிட் போல் கருத்துக்கணிப்பில் திமுகவே ஆட்சியைப் பிடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல, சி ஓட்டர்ஸ் நிறுவனம் தமிழகத்தின் ஒவ்வொரு மண்டல ரீதியாகவும் யாருக்கு அதிக இடங்களை வெல்ல வாய்ப்பு என்றும் தனது எக்சிட் போல் முடிவுகளில் தெரிவித்துள்ளது.

அதன்படி

சோழ நாடு காவிரி டெல்டா மண்டலம்

திமுக 32 - 34

அதிமுக 7 - 9

அமமுக 1

சென்னை மாநகரம்

திமுக 11 - 13

அதிமுக 3 - 5

கொங்கு மண்டலம்

திமுக 33 - 35

அதிமுக 17 -19

பல்லவ நாடு (வ‌ட தமிழ்நாடு)

திமுக 36 - 38

அதிமுக 8 -10

அமமுக 1

பாண்டிய நாடு தென் மாவட்டம்

திமுக 33 - 35

அதிமுக 21 - 23

அமமுக 2

இவ்வாறு சி ஓட்டார்ஸ் நிறுவனம் தனது மண்டல வாரியான தமிழ்நாடு எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி திமுக டெல்டா, தென்மாவட்டங்கள், வட மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்கள், சென்னை மாநகரம் ஆகிய பகுதிகளில் அதிக இடங்களில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களிலிருந்து அதிமுகவுக்கு கொங்கு எனப்படும் மேற்கு மாவட்டங்கள் கோட்டையாக விளங்கின. கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட கொங்கு பகுதியில் அதிக அளவு பெற்ற சட்டமன்றத் தொகுதிகள்தான் அதிமுகவை ஆட்சிக்கு அழைத்துச் சென்றது.

இம்முறை கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதலமைச்சராகவும் முதலமைச்சர் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்ட நிலையில்... கொங்கு மண்டலத்தில் அதிமுகவை விட இரு மடங்கு இடங்களை திமுக பெறும் என்று இந்த எக்சிட் போல் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் நேரடி கண்காணிப்பிலும், அவரது தளபதிகளாக எஸ் பி வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களின் பொறுப்பிலும் இருக்கும் கொங்கு மண்டலம் இந்த முறை அதிமுகவுக்கு சாதகமாக இருக்காது என்கிறது சி ஓட்டர்ஸ் எக்சிட் போல்.

அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு வகிக்கும் தென்மாவட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தால் அதிமுக பெரிய அளவு அடிவாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்... சி ஓட்டர்ஸ் எக்சிட் போல் முடிவுகளின்படி கொங்கு நாட்டைவிட தென்மாவட்டங்களில் அதிமுக சிறப்பாக பர்பாமன்ஸ் செய்திருப்பதாக தெரிகிறது.

இது கட்சிகள் மத்தியில் மட்டுமல்லாமல், அதிமுக என்ற கட்சிக்கு உள்ளேயும் சலசலப்பைக் கிளப்பியுள்ளது. இந்த முடிவுகள் தேர்தல் முடிவுகளோடு பொருந்திப் போகும் பட்சத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் அதிகார யுத்தம் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மேலும் அதிகமாகும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

-வேந்தன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

வெள்ளி 30 ஏப் 2021