மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 ஏப் 2021

கோவாக்சின் இரண்டாவது டோஸ்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

கோவாக்சின் இரண்டாவது டோஸ்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

சென்னையில் கோவாக்சின் இரண்டாவது டோஸ் கிடைக்கவில்லையென்றால், ஆன்லைனில் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த 27ஆம் தேதி வரை 13,97,195 பேருக்கு போடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னையில் கடந்த சில நாட்களாக பல தடுப்பூசி மையங்களில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசி போட முடியாமல் அவதிப்படுகின்றனர். பல மருத்துவமனைகளாக அலைந்து திரிகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், “கோவாக்சின் தடுப்பூசி விநியோகம் குறைந்துள்ளதால், இரண்டாவது தவணை போடுவோருக்கு மட்டுமே தற்போது கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி தேர்ந்தெடுக்கப்பட்ட சில மையங்களில் மட்டும் கிடைக்கிறது. கோவாக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி கிடைக்காவிட்டால், இந்த இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதையடுத்து, தடுப்பூசி போடுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியைத் தொடர்ந்து, மாநிலங்களுக்கு வழங்கும் கோவாக்சின் தடுப்பூசியின் விலையை 400 ரூபாயாக பாரத் பயோடெக் நிறுவனம் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வெள்ளி 30 ஏப் 2021