மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஏப் 2021

கொலை மிரட்டல் வருகிறது : நடிகர் சித்தார்த்

கொலை மிரட்டல் வருகிறது : நடிகர் சித்தார்த்

தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பாலியல் மற்றும் கொலை மிரட்டல் அழைப்புகள் வந்ததாக நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளார்.

கொரோனா பாதிப்பினால் நாட்டில் நிலவி வரும் மோசமான நிலை குறித்து அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதுபோன்று, மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் இலவச தடுப்பூசி போடப்படும் என்ற ட்வீட்டை பகிர்ந்து ”பாஜக எப்போது ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்படுகிறதோ அப்போதுதான் இந்த நாடு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அர்த்தம்” என்று நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்திருந்தார்.

சமீபத்தில், உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அம்மாநில முதல்வர் ஊடகங்களில் தெரிவித்திருந்தார். இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் சித்தார்த்,” மனிதராக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், பொய் சொன்னால் அறை விழும்'' என தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச முதல்வரை அவதூறாக விமர்சித்து ட்வீட் செய்ததற்காக நடிகர் சித்தார்த் மீது பாஜக நிர்வாகி ஆனந்தன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், பாஜகவினர் தனது செல்போன் எண்ணை பரப்பி வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நடிகர் சித்தார்த் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டரில்,”கடந்த 24 மணி நேரத்தில் எனக்கும் , எனது குடும்பத்தாருக்கும் பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல்கள் என கிட்டத்தட்ட 500 அழைப்புகளுக்கு மேல் வந்துவிட்டது. தமிழக பாஜகவின் ஐ.டி. பிரிவு, என்னுடைய தொலைபேசி எண்ணை வெளியிட்டதால் இந்த அழைப்புகள் வந்துள்ளன. எனக்கு வந்த அழைப்புகள் அனைத்தும் பதிவு செய்துள்ளேன். அதை போலீசிடம் ஒப்படைப்பேன். என்ன நடந்தாலும், நான் பேசுவதை நிறுத்தப் போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

சித்தார்த்திற்கு ஆதரவாக இந்திய அளவில் #IStandWithSiddharth என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

வினிதா

.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 29 ஏப் 2021