மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஏப் 2021

மே 1ல் ஊரடங்கிற்கு அவசியமில்லை: தமிழக அரசு!

மே 1ல் ஊரடங்கிற்கு அவசியமில்லை: தமிழக அரசு!

தமிழகத்தில் மே 1ஆம் தேதி ஊரடங்கிற்கு அவசியமில்லை என்றும், மே 2ஆம் தேதி வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே 1, 2 ஆகிய தேதிகளில் ஊரடங்கு அமல்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையில், “மே 1ஆம் தேதி தொழிலாளர் தினம் என்பதால் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வெளியே வருவதற்கு வாய்ப்பில்லை என்பதால் பாதிப்பு இருக்காது. அதேசமயம் அன்றுதான் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படுவதால், அவர்களை தடுக்க முடியாது. அதனால், மே 1 ஆம் தேதி ஊரடங்கு விதிக்க அவசியமில்லை.

மே 2ஆம் தேதி வழக்கம்போல் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அன்று தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு கட்டுப்பாடுகள் கிடையாது. அலுவலர்களுக்கு உணவு எடுத்து செல்பவர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து அரசு விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு(ஏப்ரல் 30) தள்ளி வைத்துள்ளது.

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

வியாழன் 29 ஏப் 2021