மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஏப் 2021

தடுப்பூசிதான் ஒரே தீர்வு: ஆணையர்!

தடுப்பூசிதான் ஒரே தீர்வு: ஆணையர்!

மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதுதான் ஒரே தீர்வு என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை சிஐடி நகரில் மாநகராட்சி களப்பணியாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் பணி திட்டமிடல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பு அதிகாரி சித்திக் ஐஏஎஸ் ஆகிய இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஆணையர், “செயல்பாட்டில் இருக்கும் இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானவையே. மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். இப்போதைக்கு தடுப்பூசிதான் ஒரே தீர்வு. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முன்பதிவில் சிறு சிறு தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளன. அவை சரிசெய்யப்பட்டதும் முன்பதிவு செய்தவர்களின் விவரம் தெரிவிக்கப்படும். வட மாநிலங்களைப் போல் சென்னையில் இறப்பு விகிதம் இல்லை. சென்னையில் கொரோனாவால் இறப்போர்களின் விகிதம் 1.4 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியில் ஈடுபடும் தேர்தல் முகவர்களுக்கு இன்று இரண்டாவது நாளாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. முகவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டு இருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சிறப்பு அதிகாரி சித்திக்,”"சென்னையில் சுனாமி போல் கொரோனா தொற்று பரவி வருகிறது. சென்னையில் 25 ஆயிரம் பேர் வீடுகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.. ஆக்சிஜன் பற்றாக்குறையைச் சரி செய்வதற்கானப் பணிகளை விரைவுப்படுத்தி உள்ளோம். தொற்றுள்ளவர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தக் கூடாது. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை; ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதற்கட்டமாக 250 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கப்படவுள்ளது. ஏற்கனவே 12 ஸ்கிரீனிங் மையங்கள் உள்ள நிலையில், மேலும் 9 மையங்கள் அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே இந்த கொடிய கொரோனா அலையை ஒழிக்க முடியும்” என கூறினார்.

வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 29 ஏப் 2021