மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 29 ஏப் 2021

ஆசிரியர்களுக்காக கோரிக்கை வைக்கும் கனிமொழி

ஆசிரியர்களுக்காக கோரிக்கை வைக்கும் கனிமொழி

தேர்தல் பணி காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களைக் கண்டறிந்து தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது மே 2ஆம் தேதி நடக்கப்போகிற வாக்கு எண்ணிக்கை பணியிலும் அவர்களை ஈடுபடுத்துவதற்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், முகவர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பரிசோதனை செய்த பின்னரே, அவர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி, அவர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஏராளமான ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி ட்விட்டரில், “ஆசிரியர்கள் தேர்தல் பணியை இந்த பெருந்தொற்று காலத்திலும் கடும் சவால்களுக்கு இடையே செய்து முடித்துள்ளனர். இதில் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஆசிரியர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வியாழன் 29 ஏப் 2021