மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

மீண்டும் உச்சம் அடைந்த கொரோனா பாதிப்பு!

மீண்டும் உச்சம் அடைந்த கொரோனா பாதிப்பு!

இரண்டு நாட்களுக்கு முன்பு சற்று குறைந்து வந்த பாதிப்பு, தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 16,665 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10,239 பேர் ஆண்கள், 6,426 பேர் பெண்கள் ஆவர். மொத்த பாதிப்பு 11, 30,167 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனையில் 51 பேரும், தனியார் மருத்துவமனையில் 47 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13,826 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 1,10,308 பேர் சிகிச்சை பெற்று வருகிற நிலையில், இன்று 15,114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,30,042 மாதிரிகள்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 4764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 3,14,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,219 பேருக்கும், கோவையில் 963 பேருக்கும், திருவள்ளூரில் 751 பேருக்கும் கிருஷ்ணகிரியில் 454 பேருக்கும், மதுரையில் 492 பேருக்கும், திருநெல்வேலியில் 714 பேருக்கும், திருச்சியில் 480 பேருக்கும், திருப்பூரில் 493 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

புதன் 28 ஏப் 2021