மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

தடுப்பூசி குறித்த முதல்வர் ட்வீட்!

தடுப்பூசி குறித்த முதல்வர் ட்வீட்!

கொரோனா தொற்றின் தீவிரத்தை புரிந்து கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், உயிரிழப்புகள் 3 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தாண்டி செல்கிறது. இந்த கொடிய கொரோனாவிலிருந்து தப்பிக்க நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால், தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரிவுப்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் இதுவரை 55.51 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைவரும் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் தன்னுடைய ட்விட்டரில்,”கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

புதன் 28 ஏப் 2021