மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

தடுப்பூசி முன்பதிவு: ட்விட்டரில் நிரம்பிய கேள்விகள்!

தடுப்பூசி முன்பதிவு: ட்விட்டரில் நிரம்பிய கேள்விகள்!

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு கொள்வதற்கான முன்பதிவு இன்று மாலை தொடங்கியுள்ள நிலையில், முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வருகிற மே 1ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இன்று(ஏப்ரல் 28) மாலை 4 மணி முதல் கோவின் இணையதளத்தில் தடுப்பூசி முன்பதிவு தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அதிகமானோர் கோவின் இணையதளத்திலும், ஆரோக்ய சேது செயலியிலும் முன்பதிவு செய்வதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால், சர்வர் பிரச்சினையால் முன்பதிவு செய்ய முடியவில்லை.

இந்நிலையில் ட்விட்டரில் ”யாராவது கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்தீர்களா?, ’இணையதளமும், செயலியும் எனக்கு வேலை செய்யமாட்டேங்குது’, ’நீண்ட நேரமாகியும் ஓடிபி வரவில்லை’, ”உங்களின் கோவின் போர்ட்டல் வேலை செய்யவில்லை. அதை உடனே சரிசெய்யுங்கள்” என மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்தும் வருகின்றன.

இந்த பிரச்சினையை விரைவில் சரிசெய்ய வேண்டும் என்றும், 18-44 வயதினருக்கான ஸ்லாட்-ஐயும், தடுப்பூசி இல்லை என்று வருவதையும் சரிசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ட்விட்டர் முழுவதும் இதுபோன்ற கேள்விகள்தான் நிரம்பியுள்ளன.

ஒரே நேரத்தில் அனைவரும் இணையதளத்தில் லாக் இன் செய்வதால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

புதன் 28 ஏப் 2021