மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

வாக்கு எண்ணிக்கை: ஆணையத்தின் புதிய உத்தரவு!

வாக்கு எண்ணிக்கை: ஆணையத்தின் புதிய உத்தரவு!

இன்றைக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய உத்தரவில், மே 2 அன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி,கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மேற்குவங்கத்தில் நாளையுடன் சட்டமன்ற தேர்தல் நிறைவுபெறுகிறது. இதையடுத்து மே 2ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேர்தல் முடிவுகளை அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் நேற்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று(ஏப்ரல் 28) இந்திய தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே எந்த காரணத்தைக் கொண்டும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முகவர் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு எடுத்த ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா நெகடிவ் என்று வந்திருக்க வேண்டும் அல்லது தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டு இருக்க வேண்டும். சான்றிழ் காட்டாத முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் நடைபெறும் சிறப்பு முகாமில் வேட்பாளர்களின் முகவர்கள் கட்டாயம் பங்கேற்று கொரோனா பரிசோதனைகளை செய்துக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. அதுபோன்று, விழுப்புரம், திண்டிவனம், நாமக்கல், கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் முகவர்கள் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

இன்று புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 7 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள், முகவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 110 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 28 ஏப் 2021