மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

ஆக்ரா: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 8 பேர் பலி!

ஆக்ரா: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 8 பேர் பலி!

உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், எட்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால், இந்தியா முன்னேப்பதும் இல்லாத பாதிப்புகளை சந்தித்து வரும்போது, உத்தரப்பிரதேசம் மாநிலம் மட்டும் அதற்கு விதி விலக்கு அல்ல. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆக்ராவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் நேற்று எட்டு கொரோனா நோயாளிகள்உயிரிழந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என மருத்துவமனை ஊழியர் தனு சதுர்வேதி தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட நீதிபதி பிரபுசிங் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது, ஆனால் அது விரைவில் சரிசெய்யப்படும். திடீரென நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து உள்ளது” என்று கூறினார்.

ஆக்ரா நகரில் உள்ள மருத்துவமனைகளில், “படுக்கை வசதி இல்லை, என்று வளாகத்திற்கு வெளியே நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது. இன்னும் சில மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்களே ஏற்பாடு செய்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோன்று பிரபா மருத்துவமனையில், நோயாளிகளின் உறவினர்களிடம் வெற்று சிலிண்டர் உருளையும், ஒரு கடிதத்தையும் கொடுத்து வருகின்றனர். அதில், ”மருத்துவமனையில் 100 நோயாளிகள் இருக்கின்றனர். ஆனால், போதுமான அளவு ஆக்சிஜன் இல்லை. அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கபடாவிட்டால், உயிரிழந்துவிடுவார்கள்” என எழுதப்பட்டுள்ளது.

இவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கும்போது, ”மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. ஆக்சிஜன் இல்லை என்று பொய் கூறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தது ஊடகங்களில் வெளியானது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் சித்தார்த்,” மனிதராக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், பொய் சொன்னால் அறை விழும்'' என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், உத்தரபிரதேசமாநிலம் அமேதியில் ட்விட்டர் மூலமாக தனது தாத்தாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என உதவி கேட்ட இளைஞர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

புதன் 28 ஏப் 2021