மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

தடுப்பூசி முன்பதிவுக்கான நேரம் அறிவிப்பு!

தடுப்பூசி முன்பதிவுக்கான நேரம் அறிவிப்பு!

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு கொள்வதற்கான முன்பதிவு மாலை 4 மணி முதல் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோன பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் தடுப்பூசி போடும் திட்டத்தையும் விரிவுப்படுத்தி வருகின்றது அரசு. அதன்படி, நான்காவது கட்டமாக வருகிற மே 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் 18-44 வயதுள்ளவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தடுப்பூசி வீணாவதை தடுக்கவும், தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், இந்த முறை தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பதிவு கட்டாயம் எனவும், அதற்கான முன்பதிவு ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று(ஏப்ரல் 28) காலை முதலே பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு ’கோவின்’ என்ற இணையதளம் மற்றும் ஆரோக்ய சேது செயலியில் முன்பதிவு செய்ய முயன்றும், அவர்களால் முன்பதிவு செய்ய முடியவில்லை. அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்தபிறகு கடைசியில் பதிவு செய்யும்போது error என்று காட்டியதால் பலரும் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை 4 மணி முதல் ’கோவின்’ இணையதளத்திலும், ஆரோக்ய சேது செயலியிலும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். முன்பதிவு செய்தவுடன் அந்த விவரங்கள் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்பதிவு செய்வது எப்படி?

முதலில் cowin.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.

அங்கு, பதிவுசெய்ய 'register/sign in yourself 'என்பதை க்ளிக் செய்யவும்.

அதன்பிறகு, 10 இலக்க மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை டைப் செய்யவும். இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு வரும் ஓடிபி நம்பரை நிரப்ப வேண்டும்.

பின்பு, தடுப்பூசிக்கான பதிவு பக்கம் ஓபன் ஆகும். அதில், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை, பெயர், பாலினம் மற்றும் பிறந்த ஆண்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.

இதையடுத்து, உங்கள் பகுதி பின்கோடை(pincode)நிரப்பினால், உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களின் விவரம் காண்பிக்கப்படும். அதில், தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு, பதிவு என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

ஆரோக்ய சேது செயலி

ஆரோக்ய சேது செயலின் முகப்புத் திரையில் கோவின் என்னும் பகுதியை க்ளிக் செய்யவும்.

அதில் தடுப்பூசி பதிவு என்பதை கிளிக் செய்து, மொபைல் எண்ணை பதிவு செய்து கிடைக்கப்பெறும், ஓடிபியை உள்ளீடு செய்ய வேண்டும்.

தடுப்பூசி பதிவு பக்கம் ஓபன் ஆகும். அதன்பிறகு, மேலே கூறிய கோவின் வலைதளத்தில் பதிவு செய்யக்கூடிய செயல்முறையை பின்பற்றி தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 28 ஏப் 2021