`சென்னைக்கு சிறப்புஅதிகாரி நியமனம்!

politics

சென்னையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. 

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. 

இந்நிலையில்,சென்னை மாநகராட்சியில் உள்ள மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கண்காணிக்க சிறப்பு அதிகாரியாக தரேஸ் அகமதை நியமனம் செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தரேஸ் அகமது ஐஏஎஸ், மருத்துவமனைகளில் முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா, சரியான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா,கொரோனா நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா, சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா உள்ளிட்ட பல்வேறு வகையான அம்சங்களை கண்காணிப்பார்.இதுகுறித்து தினசரி தலைமை செயலாளரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர் தரேஸ் அகமது. இளைஞராக இருந்தாலும், மக்களோடு  மக்களாக கலந்து அவர்களின் உணர்வுகளை புரிந்து பணியாற்றுபவர். மக்களுக்கு தேவையானதை உடனுக்குடன் செய்வதில் ஆர்வமும், சேவை மனப்பான்மையும் கொண்டவர். மத்திய அரசிடமிருந்து  சிறந்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கியுள்ளார்.  தற்போது அவருக்கு கொரோனா மருத்துவமனைகளை கண்காணிக்கும் சிறப்பு அதிகாரி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியையும் சிறப்பாக மேற்கொள்வார். 

 

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *