மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

ஒன்றரை கோடி தடுப்பூசிகள் கொள்முதல்!

ஒன்றரை கோடி தடுப்பூசிகள் கொள்முதல்!

தமிழகத்தில்,18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு முதற்கட்டமாக ஒன்றரை கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தற்போது வரை 55.51 லட்சம் பேர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தப்படி இலவசமாக தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தற்போதுவரை மத்திய அரசு தான் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்கி கொண்டிருந்தது. முதன்முறையாக தமிழக அரசு நேரடியாக 1.50 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், “ முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்யப்படும். 1.20 கோடி டோஸ்கள் கோவிஷீல்டும், 30 லட்சம் டோஸ்கள் கோவாக்சினும் கொள்முதல் செய்யப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

புதன் 28 ஏப் 2021