மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

ஆந்திராவின் நிலை!

ஆந்திராவின் நிலை!

கொரோனா அச்சம் காரணமாக உயிரிழந்த பெண்ணின் உடலை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால், சடலத்தை அவரது மகனே இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா என்ற கொடிய நோய்க்கு மத்தியில் இந்திய மக்களின் உயிர்கள் பல்வேறு வழிகளில் காவு வாங்கப்படுகிறது. கொரோனா தொற்று, மருத்துவமனையில் தீ விபத்து, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் இறப்பு சம்பவங்கள் நடைபெறுகின்றன.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள மண்டாச மண்டல் கிராமத்தை சேர்ந்த பெண், கடந்த திங்கட்கிழமை அன்று கொரோனா போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு, கொரோனா பரிசோதனை செய்துவிட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே அந்த பெண் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல, அங்கிருந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்களை அவரது மகன் அழைத்தார். ஆனால், கொரோனா அச்சம் காரணமாக அவர்கள் யாருமே வரவில்லை. அவருக்கு கொரோனா இல்லை என்று சொல்லிய பிறகும், மறுத்துவிட்டனர். சடலத்தை அங்கேயே ரொம்ப நேரத்துக்கு வைத்திருக்க முடியாது என்பதால், என்ன செய்வதன்று தெரியாமல் அவரது மகன் தவித்து கொண்டிருந்தார். இதையடுத்து, அந்த பெண்ணின் மகனும் மருமகனும் பைக்கில் சடலத்தை உட்கார வைத்தே சுடுகாட்டுக்கு உடலை கொண்டு சென்றனர்.

இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதே மாநிலத்தில் மருத்துவமனையில் இடம் இல்லாததால் ஒருவயது குழந்தை பலியான சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அச்சுதாபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை ஜான்விதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, பெற்றோர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் குழந்தையை சேர்த்துக்கொள்ள தனியார் மருத்துவமனை மறுத்து விட்டது. இருப்பினும், அங்கு குழந்தைக்கு பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து விசாகப்பட்டினம் கேஜிஹெச். அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் குழந்தையை அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு படுக்கைகள் நிரம்பிவிட்டதால், குழந்தை ஆம்புலன்சிலேயே வைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் காத்திருந்த குழந்தை ஆம்புலன்சிலேயே உயிரிழந்தது. குழந்தையை பறிகொடுத்த பெற்றோர் மருத்துவமனை முன்பு கண்ணீருடன் கதறி அழும் காட்சி இதயத்தை நொறுக்கியது.

தொற்று தீவிரத்தால் உயிரிழப்பு ஏற்படுவதை விட மருத்துவ உபகரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகள்தான் அதிகமாகி வருகின்றன.

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

புதன் 28 ஏப் 2021