மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

நகையை அடகு வைத்து உதவிய தம்பதி!

நகையை அடகு வைத்து உதவிய தம்பதி!

கோவையில் நகைகளை அடகு வைத்து கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மின்விசிறிகளை வழங்கிய தம்பதியினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கோவை ராம் நகரில் வசித்து வரும் தம்பதியினர் அதே பகுதியில் கடை ஒன்று நடத்தி வருகின்றனர். நேற்று காலை 11 மணியளவில் சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சென்றுள்ளனர்.

அப்போது, கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பரவல் காரணமாக ஏசி போன்ற குளிர்சாதன பொருட்கள் பயன்படுத்துவதில்லை.

இதனால் சிகிச்சை பெறுவோருக்கு வசதியாக மின் விசிறிகளை வழங்க வேண்டும் என கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதை தெரிந்து கொண்ட தம்பதியினர், தங்களது தங்க நகைகளை ரூ. 2.20 லட்சத்துக்கு அடகு வைத்து அந்த பணத்தை கொண்டு 100 மின் விசிறிகளை வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

இதனால் வருத்தம் அடைந்த மருத்துவமனை டீன் ரவீந்திரன், இவ்வளவு மின் விசிறிகளை வழங்க வேண்டாம். பாதி நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். மீதியுள்ள விசிறிகளை திரும்பக் கொடுத்து நகைகளை மீட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

மின்விசிறி கொரோனா நோயாளிகளுக்காக வாங்கி வரப்பட்டது. எனவே அவர்களுக்கு இது சென்றடைய வேண்டும் என தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து டீன் ரவீந்திரன் மாவட்ட ஆட்சியர் நாகராஜனை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்துள்ளார். டீன் கூறியதை போன்று ஆட்சியரும் கூறியுள்ளார். ஆனால், தாங்கள் கொண்டு வந்த மின்விசிறியை திரும்ப எடுத்துச் செல்ல மாட்டோம் என பிடிவாதமாக இருந்தனர்.

இதையடுத்து, மருத்துவமனை டீன் தம்பதியினரிடம் இருந்து மின்விசிறிகளை வாங்கிக் கொண்டனர். மேலும், தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட எந்த விவரங்களையும் வெளியிட வேண்டாம் என அந்த தம்பதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தங்களது நகைகளை அடகு வைத்து, நோயாளிகளுக்கு உதவிய தம்பதியினருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அதுபோன்று, மத்தியப்பிரதேசம் மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள குவால் தேவியன் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பலால் குர்ஜார். இவர் விவசாயம் செய்து, தனது மகள் அனிதாவின் திருமணத்துக்காக ரூ. 2 லட்சம் வரை சேமித்து வைத்திருந்தார்.

நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் படும் துயரத்தை கண்டு, ரூ.2 லட்ச பணத்தை ஆக்சிஜன் வாங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் மய்ங் அகர்வாலிடம் கொடுத்தார்.

”நிறைய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பரிதவித்து வருவதாக வரும் செய்திகள் என் தூக்கத்தை கெடுத்தது.

இந்த பணத்தை வைத்து மகளின் திருமண விழாவை விமரிசையாக நடத்துவதைக் காட்டிலும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக செலவு செய்தது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது” என சம்பலால் குர்ஜார் கூறியுள்ளார்.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

புதன் 28 ஏப் 2021