மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

அடுத்து பெரிய கடைகள்!

அடுத்து பெரிய கடைகள்!

தமிழகத்தில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நேற்று 15,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று மட்டும் 77 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் 4,640 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,18,614 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 26ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை பெரிய கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவைகள் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

இதில், பெரிய கடைகளை கணக்கெடுத்து மூடுவதில் மாவட்ட நிர்வாகத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட சில மாவட்ட ஆட்சியர்கள் ‘எத்தனை சதுர அடி இருந்தால் அதை பெரிய கடைகளாக கருதுவது’ என்று தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்று(ஏப்ரல் 27) தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், ”3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாவட்டங்களுக்கும் பொருந்தும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், முழு ஊரடங்கை நோக்கி செல்வதற்கு முன்பு, படிப்படியாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 28 ஏப் 2021