மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 28 ஏப் 2021

தடுப்பூசிக்கான முன்பதிவு தொடக்கம்!

தடுப்பூசிக்கான முன்பதிவு தொடக்கம்!

நாடு முழுவதும் 18 வயது மேற்பட்டோர் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அந்த வகையில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஜனவரி 16 ஆம் தேதி முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பமானது. இதைத் தொடர்ந்து, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கும் போடப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. நான்காவது கட்டமாக வருகிற மே 1 ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இந்தமுறை, தடுப்பூசியை பெறுவதற்கு, 18 - 44 வயதுக்குட்பட்டோர், 'கோவின்' இணைய தளத்தில் அல்லது 'ஆரோக்கிய சேது' செயலி வாயிலாக முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவு இன்று(ஏப்ரல் 28) முதல் தொடங்குகிறது. எப்படி முன்பதிவு செய்வது என்பது குறித்து நமது மின்னம்பலத்தில் தடுப்பூசி: முன்பதிவு செய்வது எப்படி? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த வழிமுறைகளை பின்பற்றி அனைவரும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

தவறாமல் தடுப்பூசி போடுவோம், கொரோனாவை வெல்வோம்!

வினிதா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 28 ஏப் 2021