மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 27 ஏப் 2021

ரசிகர்களை பலி கொடுக்காத ரஜினி: ட்விட்டர் ட்ரெண்ட்

ரசிகர்களை பலி கொடுக்காத ரஜினி: ட்விட்டர்  ட்ரெண்ட்

அரசியலுக்கு வருவதாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது படங்களின் மூலமும், மேடைப் பேச்சுகளின் மூலமும் சொல்லி தனது ரசிகர்களிடையேயும், தமிழக மக்களிடையேயும், அரசியல் கட்சியினரிடையேயும், சக நடிகர்களிடையேயும் கடுமையான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார் ரஜினிகாந்த்.

ஆனால் 2020 மார்ச் தொடங்கி பிற்பகுதியில் தமிழகத்தில் பரவிய கொரோனா பேரலையால் ரஜினியின் முடிவில் மாற்றம் ஏற்பட்டது. 2020 டிசம்பர் 29 ஆம் தேதி ரஜினி வெளியிட்ட அறிப்பில் தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்பதை வெளிப்படையாக அறிக்கை மூலமாக அறிவித்துவிட்டார்.

“115 பேர் கொண்ட அண்ணாத்தே படக்குழுவினருக்கே கொரோனா வந்துவிட்டது நான் அரசியல் கட்சி ஆரம்பித்தால் லட்சக்கணக்கான பேரை நேரடியாக சந்திக்க வேண்டியிருக்கும், பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கும். கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரத்தின் போது என் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என் கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும்.

என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என்கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்,

மேலும் கடந்த டிசம்பர் மாதமே கொரோனா இரண்டாம் அலையைப் பற்றிய எச்சரிக்கையையும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்,

ரஜினி சொன்னதுபோலவே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள், கட்சிப் பிரமுகர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. ஸ்ரீல்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் கொரோனா தொற்றால் மரணமடைந்துவிட்டார். தேர்தல் களத்தில் செயல்பட்ட அரசியல் தொண்டர்கள், பத்திரிகையாளர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

நேற்று (ஏப்ரல் 26) சென்னை உயர் நீதிமன்றம் தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையம் முக்கியப் பங்கு வகித்திருப்பதாக கண்டனம் தெரிவித்தது.

இந்தப் பின்னணியில்தான் #அன்றே சொன்ன ரஜினி என்ற தலைப்பில் ட்விட்டரில் ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

“தன்னை நம்பி வந்த கட்சியினரை கொரோனாவுக்கு பலி கொடுக்க மாட்டேன், என்று அன்று சொன்ன ரஜினி, தன்னுடைய வாழ்நாள் ஆசையான அரசியலை விட்டு விலகி தன் கட்சியினரையும் தொண்டர்களையும் காப்பாற்றியிருக்கிறார். ஆனால் அவரை விமர்சித்த பல கட்சியினர் இன்று தங்கள் கட்சி நிர்வாகிகளை கொரோனாவுக்கு பலிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி ஆல்வேஸ் கிரேட்” என்று கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

-ராகவேந்திரா

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

செவ்வாய் 27 ஏப் 2021