மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

சென்னை: ஐந்தில் ஒருவருக்கு கொரோனா!

சென்னை: ஐந்தில் ஒருவருக்கு கொரோனா!

சென்னையில் கொரோனா பரிசோதனையில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தில், சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் சனிக்கிழமை மட்டும் 20,012 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2020 மார்ச் மாதம் தொற்று பரவ தொடங்கியதிலிருந்து ஒருநாளில் 20,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்வது இதுவே முதல் முறை.

இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் 25000த்தை எட்டும். அடுத்த 30-35 நாட்கள் சென்னைக்கு மிக கஷ்டமான நாட்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

சென்னை உள்ளாட்சி அமைப்புகள் நேற்று(ஏப்ரல் 25) வெளியிட்ட அறிக்கையின்படி, “சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக 19.6% ஆக இருந்த கொரோனா பாதிப்பு சனிக்கிழமையன்று 20.42% ஆக உயர்ந்தது. அதாவது, பரிசோதனை செய்யப்படும் ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

தொற்று பாதித்தவர்களின் தொடர்பு அதிகமாக இருப்பதால், பரிசோதனைகளும் அதிகரிக்கிறது. தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் தொடர்பில் இருந்த 8 பேரை மாநகராட்சி பரிசோதித்து வருகிறது. பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் போன்ற குடும்ப தொடர்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஓட்டுநர்கள் பணிபுரியும் இடங்களில் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்களுடைய சக பணியாளர்கள் என அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது, பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை முழுமையாக கண்டறிய முடிந்தது. மேலும், பாதிப்புள்ளவர்களுடன் இருக்கும் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் போக்குவரத்தினால் ஒரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்வதால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்க முடிவதில்லை.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 8 மண்டலங்களில் 2000 ககும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளது. தண்டையார்பேட்டையில் 2,203 பேரும், ராயபுரத்தில் 2,520 பேரும், திரு.வி.க நகரில் 2,952 பேரும், அம்பத்தூரில் 2,413 பேரும், அண்ணா நகரில் 3,295 பேரும், தேனாம்பேட்டையில் 3,318 பேரும், கோடம்பாக்கத்தில் 2,794 பேரும், அடையாறில் 2,318 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 30 முதல் 39 வயதுக்குட்பட்ட 21.93 சதவிகிதம் பேரும், 20 முதல் 29 வயதுக்குட்பட்ட 19.80 சதவிகிதம் பேரும் 40 முதல் 49 வயதுக்குட்பட்ட 17.66 சதவிகிதம் பேரும், 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1.89 சதவிகிதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோன்று, கொரோனா பாதித்தவர்களில் 59,17 சதவிகித்தினர் ஆண்கள், 40.83 சதவிகித்தினர் பெண்கள் ஆவர்.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்படும். அதன்படி, சென்னையில் தற்காலிகமாக 15 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் திறக்கப்படவுள்ளன. இந்த முகாம்களில் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்படும். விநியோக தடை காரணமாக இரண்டாவது டோஸ் செலுத்துபவர்களுக்கு மட்டும் கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மே மாத மத்தியில் அல்லது இறுதியில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடையும் என்பது நிபுணர்களின் கணிப்பு.

வினிதா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

திங்கள் 26 ஏப் 2021