மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

தேவையில்லாமல் ரெம்டெசிவிரை எடுத்தால் பாதிப்பு!

தேவையில்லாமல் ரெம்டெசிவிரை எடுத்தால் பாதிப்பு!

லேசான மற்றும் மிதமான பாதிப்பு கொண்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவையில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு மத்தியில், நோயின் தீவிரத்துக்கு ஏற்பதான் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீன் குலேரியா கூறுகையில், “கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் 10 முதல் 15 சதவிகித்தினருக்கு மட்டுமே கடுமையான பாதிப்பு ஏற்படுவதால், ஆக்சிஜன் உதவியும், ஆன்டிவைரல் ரெம்டெசிவிர் போன்ற மருந்துகள் தேவைப்படுகின்றன. தொற்று ஏற்பட்டுள்ள 85-90% பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. இவர்கள் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறலாம். இந்தவேளையில் அனைவரும் மருத்துவமனைக்கு சென்றால், ஆக்சிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு என்ற தேவையற்ற பீதி ஏற்படும் . அதனால், ரெம்டெசிவிர் அல்லது ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போன்ற மருந்துகளை பதுக்கி வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பாலான மக்களுக்கு காய்ச்சல், இருமல், போன்ற லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. அவர்களுக்கு ஆவி பிடிப்பது, யோகா செய்வது உள்ளிட்ட சிகிச்சையே போதுமானது. பொதுவாக கொரோனா அறிகுறிகள் ஒருவாரம் முதல் 10 நாட்கள் வரை மட்டுமே இருக்கும். சுமார் 5% பேருக்கு மட்டுமே கடுமையான பாதிப்பு இருப்பதால் வலுவான மருந்துகள் மற்றும் வென்டிலேட்டர் உள்ளிட்டவை தேவைப்படும். கொரோனா உறுதி செய்யப்பட்டதால், உடனே மருத்துவமனையில் சென்று அனுமதிக்க வேண்டும், ஆக்சிஜன் தேவை என்று நீங்களாகவே ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.

அதுபோன்று, ரெம்டெசிவிர் மருந்து என்பது சிகிச்சையின் ஒரு பகுதி மட்டுமே. மேலும், இது உயிர் காக்கும் மருந்து இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதனால், லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக் கொள்ள தேவையில்லை. தேவையில்லாமல் அந்த ஊசியை எடுத்துக் கொண்டால் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றிற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறோம், என்றால், தற்போது சமூக பரவலில் இருக்கும் உருமாறிய கொரோனாவின் பரவல் திறன் இருமடங்காக இருக்கிறது.

கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தவிர, தடுப்பூசி போட்டுக் கொள்வது மற்றொரு தடுப்பு நடவடிக்கையாகும். இது நீண்ட காலத்திற்கு பயனளிக்கும். அதனால், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

திங்கள் 26 ஏப் 2021