மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

’என் மீது வழக்கு போடுங்கள்’: பிரியங்கா காந்தி

’என் மீது வழக்கு போடுங்கள்’: பிரியங்கா காந்தி

“என் மீது வழக்கு போடுங்கள். என் சொத்தைப் பறிமுதல் செய்யுங்கள். ஆனால், சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து உடனடியாக மக்களின் உயிரைக் காப்பாற்றும் பணியைத் தொடங்குங்கள்” என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால், உயிர் பலிகளும் ஏற்பட்டு வருவதை ஊடகங்கள் வாயிலாக காண முடிகிறது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று (ஏப்ரல் 25) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “உத்தரப்பிரதேசத்தில் எந்த மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. கான்பூர் ஐ.ஐ.டி., ஆக்ரா ஐ.ஐ.டி., ஐ.ஐ.டி. பிஹெச்யு ஆகியவற்றுடன் இணைந்து மாநிலத்தின் ஆக்சிஜன் தேவை, வழங்கல், விநியோகத்தை முறையாகக் கண்காணித்து வருகிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை ஏற்படுவதில்லை. அதனால், தேவைப்படுபவர்கள் மட்டுமே அதைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக தவறான தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. யூகத்தின் அடிப்படையில் ஆக்சிஜன் பற்றாக்குறை என வதந்தி பரப்புவோர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில், “முதலமைச்சரே, உத்தரப்பிரதேசம் முழுவதும் ஆக்சிஜன் அவசரநிலை உள்ளது. நீங்கள் என் மீது வழக்கு போடுங்கள். என் சொத்தைப் பறிமுதல் செய்யுங்கள். ஆனால் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, உடனடியாக மக்களின் உயிரைக் காப்பாற்றும் பணியைத் தொடங்குங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

திங்கள் 26 ஏப் 2021