மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 26 ஏப் 2021

மருத்துவத் தேவைக்கு மட்டுமே ஆக்சிஜன்: அமித் ஷா

மருத்துவத் தேவைக்கு மட்டுமே ஆக்சிஜன்: அமித் ஷா

நாட்டில் மருத்துவத் தேவைக்கு மட்டுமே ஆக்சிஜன் பயன்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் நோயின் தீவிரத்தால் ஏற்படும் அசாதாரணமான சூழ்நிலைகளைக் கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு கொடூரமாக இருக்கிறது. இந்தியாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்கிறது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து, அதை தடையின்றி நோயாளிகளுக்குக் கிடைக்க செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன. தேவைப்படும் இடங்களுக்கு ரயில்கள், விமானங்கள் மூலம் ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 25) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆக்சிஜன் விநியோகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து வெளியிடப்பட்ட உத்தரவில், “நாட்டில் மருத்துவ தேவைக்கு மட்டுமே ஆக்சிஜனைப் பயன்படுத்த வேண்டும். எந்தவொரு மருத்துவ காரணங்கள் அல்லாத நோக்கத்துக்காக திரவ ஆக்சிஜனைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. மேலும் அனைத்து ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளும் அவற்றின் உற்பத்தியை மருத்துவப் பயன்பாட்டிற்குக் கிடைக்கச் செய்ய வேண்டும். இதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் திரவ ஆக்சிஜனை வைத்திருந்தால் உடனடியாக மருத்துவத் தேவைக்கு வழங்க வேண்டும்.

பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் அதனால் ஏற்படுகிற உயிரிழப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜனை தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையாகும்.

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அடுத்த உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது துறைகளைத் தவிர்த்து, ஏப்ரல் 22 முதல், உற்பத்தியாளர்கள் தொழில்துறை நோக்கங்களுக்காக ஆக்சிஜன் வழங்குவதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வினிதா

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

திங்கள் 26 ஏப் 2021