மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன்: முதல்வர் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன்:  முதல்வர் கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாடு முழுதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் பலர் இறந்துகொண்டிருக்கிறார்கள். வட இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இந்தியாவின் கொரோனா இறப்பு விகிதம் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில்...

தூத்துக்குடியில் போராட்டத்தின் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை சார்பில், ‘இக்கட்டான இந்த சூழலில் ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும்’என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு ஏப்ரல் 23 பகல் 11 மணியளவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆக்ஸிஜன் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பாப்டே, “ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசு ஏன் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே எடுத்து நடத்தினாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்த அதிகாரம் உள்ளது. இந்தியா முழுதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் 1 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கூட மிகவும் முக்கியம்” என நீதிபதி தெரிவித்தார்.

மேலும், “ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பாக எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றி விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கை ஏப்ரல் 26 ஆம் தேதி திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தது.

இதற்கிடையில், ஏப்ரல் 23 ஆம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலானோர் ஆக்ஸிஜன் தயாரிப்பு என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு மேல் உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு வர இருக்கும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஆலோசிக்க நாளை அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். நாளை காலை 9:15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையின்போது தமிழகம் சார்பில் முன் வைக்க வேண்டிய கருத்துகள் குறித்து இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.

-வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

ஞாயிறு 25 ஏப் 2021