மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

நாட்டில் 551 ஆக்சிஜன் நிலையங்கள்!

நாட்டில் 551 ஆக்சிஜன் நிலையங்கள்!

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் ஆக்சிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுவருகிறது.

அப்படி, ஆக்சிஜன் தயாரிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது. நம்மால் ஆக்சிஜன் தயாரிக்க முடியாதா, அவ்வளவு பெரிய செய்முறையா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. உண்மையில், பிரச்சினை எங்கு உள்ளது என்பது குறித்து நமது மின்னம்பலத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியாதா? பற்றாக்குறையின் பின்னணி என்ன? என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் கிடைப்பதை அதிகரிக்கும் பொருட்டு, நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், மருத்துவமனைகளுக்கு கூடுதல் ஆக்சிஜனை சப்ளை செய்யும் நோக்குடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்த நிலையங்களிலிருந்து அந்தந்த மாவட்டத்திலுள்ள மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவை நிறைவேற்றப்படும். இதற்கான தொகை பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கப்படும். ஏற்கனவே உள்ள ஆக்சிஜன் சப்ளையை அதிகரிக்கவும், இந்த உற்பத்தி நிலையங்கள் உதவும். புதிய ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” என தெரிவித்துள்ளார்.

வினிதா

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

ஞாயிறு 25 ஏப் 2021