மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

பொதுமுடக்கம் : வீதியில் கரம்பிடித்த ஜோடிகள்!

பொதுமுடக்கம் : வீதியில் கரம்பிடித்த ஜோடிகள்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக, பல்வேறு இடங்களில் கோயிலுக்கு வெளியே வாசலில் வைத்து திருமணங்கள் நடந்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமையான இன்று(ஏப்ரல் 25) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், தமிழகம் முழுவதும் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நாளில் திருமணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. முன்பே அனுமதி பெற்றவர்களுக்கு இன்று கோயில்களில் திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாதவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் பிரசித்திபெற்ற தேவநாத சுவாமி கோயில் உள்ளது. அங்கு, முகூர்த்த தினங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், இன்று கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோயில் வாசலில் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அதுபோன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்ய 12 குடும்பங்கள் முன்பதிவு செய்திருந்தன. ஊரடங்கு காரணமாகவும், கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் விதத்திலும், ஒரு ஜோடிக்கு திருமணம் முடிந்த பிறகே அடுத்த ஜோடி கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் முகூர்த்த நேரத்தில் திருமணத்தை நடத்த முடியாது என்பதால் ஒரு ஜோடி மட்டும் கோயிலுக்கு வெளியே உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் திருக்கோயில் மூடப்பட்டிருந்தது. இதனால் கோயில் வாசலுக்கு முன்பு மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

திருமணத்துக்கு அதிகளவில் பணம் செலவாகவில்லை என்றாலும், ஊரடங்கினால், உறவினர்களை அழைக்காமலும், விமரிசையாக நடத்த முடியாமல் கோயில் வாசலில் நடத்துவது வருத்தமளிப்பதாக திருமண குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கடந்தாண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோதும், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே திருமணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இன்னும் சிலர் மாவட்டங்களின் எல்லையில் வைத்து திருமணத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 25 ஏப் 2021