மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

முழு ஊரடங்கு: டாஸ்மாக்கின் ஒருநாள் வசூல்!

முழு ஊரடங்கு: டாஸ்மாக்கின் ஒருநாள் வசூல்!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 252.48 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. அதனால், வாரநாட்களில் இரவு 9 மணியுடன் மதுகடைகளை அடைக்க வேண்டும். முழு ஊரடங்கின்போது மதுகடைகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மதுபானக்கடைகளில் ஒருமணி நேரம் குறைப்பு காரணமாக, வாடிக்கையாளர்கள் கடைகளை திறந்ததுமே மதுபானங்களை வாங்க குவிந்து வந்தனர். மேலும், இன்று(ஏப்ரல் 25) முழு ஊரடங்கினால், நேற்று மதுபானக்கடைகளில் கொரோனா கட்டுப்பாடுகளையும் மீறி கூட்டம் அலைமோதியது. விற்பனையும் அதிகமாக நடந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 252.48 கோடி ரூபாய்க்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 58.37 கோடிக்கும், மதுரையில் 49.43 கோடிக்கும், கோவையில் 48.32 கோடிக்கும், திருச்சியில் 48.57 கோடிக்கும், சேலத்தில் 47.79 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளன.

மதுவிற்பனை அதிகபட்சமாக சென்னையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 25 ஏப் 2021