மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

விரைவில் தமிழகம் முழுதும் முழு ஊரடங்கு: அதிகாரிகள் குறித்த கெடு!

விரைவில் தமிழகம் முழுதும்  முழு ஊரடங்கு: அதிகாரிகள் குறித்த கெடு!

தமிழகத்தில் முதல் கட்ட கொரோனா பரவலை விட, இரண்டாம் கட்ட கொரோனா பரவல் மிக அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தொடர்ந்து அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் 2020 கொரோனா பரவல் வேகத்தையும், இப்போதைய 2021 கொரோனா பரவல் வேகத்தையும் ஒப்பிட்டு அதற்கேற்ற மாதிரி உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது பற்றியும் விவாதித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முதன் முதலாக கடந்த 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதற்கு முன் மார்ச் 22 ஆம் தேதி இந்தியா முழுதும் மக்கள் ஊரடங்கு விதிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் அதை ஒட்டிய மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டதால் அந்த மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. படிப்படியாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்ததால், 2020 ஜூன் 24 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பில்தான், தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டது. அன்றில் இருந்துதான் தமிழகம் முழுதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

2020 ஏப்ரல் 24 தேதி நிலவரப்படி அன்று மட்டும் தமிழகத்தில் 2516 பேர்களுக்கு புதிய தொற்று ஏற்பட்டது. அன்று வரை மொத்தமாக 64 ஆயிரத்து 603பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வருடத்தில் ஏப்ரல் 24 ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் அன்று ஒரு நாள் மட்டும் 14,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 66 ஆயிரத்து 329 ஆக இருக்கிறது.

கொரோனா பரவல் முதல் கட்டத்தையும் இரண்டாம் கட்டத்தையும் ஒப்பிடும்போது இரண்டாம் கட்டத்தின் பரவல் மிக வேகமாக இருப்பதை அதிகாரிகள் கவலையோடு சுட்டிக்காட்டுகின்றனர் . கோட்டை வட்டாரத்தில்

சிலரிடம் பேசியபோது, “சில நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அரசின் ஆலோசகரான சண்முகம் உள்ளிட்டோர் பிரதமரோடு நடத்திய ஆலோசனைக் கூட்டம் பற்றி விளக்கினார்கள். அதன் பின் முதல்வர் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளோடு ஆலோசித்தார். இப்போதைய நிலவரம் தமிழகத்தில் கவலை தரும்படி இருக்கிறது. இதற்காக மருத்துவ நிபுணர்கள் முழு ஊரடங்கை சிபாரிசு செய்தாலும் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை கருத்தில் கொண்டு, மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு தயங்குகிறது. ஆனால்... ‘ஒரு நாளைக்கு 18 ஆயிரம் என்ற தொற்று எண்ணிக்கை ஏற்படும் பட்சத்தில் அதன் பரவல் மிக அதிகமாகத் தொடங்கும். எனவே நாம் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு ஒரு நாளைக்கு 18 ஆயிரம் தொற்று எண்ணிக்கை வரும் வரை யோசிக்கலாம். அதற்கு மேல் முழு ஊரடங்கை அமல்படுத்த தயங்கக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறார் தலைமைச் செயலாளர். இதன் அடிப்படையில் பார்த்தால் தமிழகத்தில் விரைவில் முழு ஊரடங்கு கறாராக பின்பற்றப்படலாம்”என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

-வேந்தன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

ஞாயிறு 25 ஏப் 2021