மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

தடுப்பூசி : முன்பதிவு செய்வது எப்படி?

தடுப்பூசி : முன்பதிவு செய்வது எப்படி?

மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 18-45 வயதுள்ளவர்களுக்கு மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு வருகிற 28ஆம் தேதி தொடங்குகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அவர்கள் விரும்பினால் முன்பதிவு செய்துக் கொள்ளலாம் அல்லது நேரடியாக தடுப்பூசி செலுத்தும் மையத்துக்கு சென்று போட்டுக் கொள்ளலாம். ஆனால், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், திட்டமிடல் இல்லாமல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றால், இறுதியில் குழப்பம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல், தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை சமாளிக்கவும், தடுப்பூசி சப்ளைக்கும், அதுகுறித்த திட்டமிடலுக்கும், முன்கூட்டியே முன்பதிவு செய்வது உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சனிக்கிழமை மாலை 8 மணிவரை 14 கோடி டோஸ் போடப்பட்டுள்ளது. சனிக்கிழமை மட்டும் 24.22 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டவர்களில் 68 சதவிகித்தினர் நேரடியாக வந்தும், 11.6 சதவிகித்தினர் ஆன்லைனில் முன்பதிவு செய்தும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் பதிவு செய்வது எப்படி?

முதலில் cowin.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.

அங்கு, பதிவுசெய்ய 'register/sign in yourself 'என்பதை க்ளிக் செய்யவும்.

அதன்பிறகு, 10 இலக்க மொபைல் எண் அல்லது ஆதார் எண்ணை டைப் செய்யவும்.

இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு வரும் ஓடிபி நம்பரை நிரப்ப வேண்டும்.

பின்பு, தடுப்பூசிக்கான பதிவு பக்கம் ஓபன் ஆகும். அதில், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை, பெயர், பாலினம் மற்றும் பிறந்த ஆண்டு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, பதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.

இதையடுத்து, உங்கள் பகுதி பின்கோடை(pincode)நிரப்பினால், உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களின் விவரம் காண்பிக்கப்படும். அதில், தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு, பதிவு என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

ஆரோக்ய சேது செயலி

ஆரோக்ய சேது செயலின் முகப்புத் திரையில் கோவின் என்னும் பகுதியை க்ளிக் செய்யவும்.

அதில் தடுப்பூசி பதிவு என்பதை கிளிக் செய்து, மொபைல் எண்ணை பதிவு செய்து கிடைக்கப்பெறும், ஓடிபியை உள்ளீடு செய்ய வேண்டும்.

தடுப்பூசி பதிவு பக்கம் ஓபன் ஆகும். அதன்பிறகு, மேலே கூறிய கோவின் வலைதளத்தில் பதிவு செய்யக்கூடிய செயல்முறையை பின்பற்றி தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யவும்.

வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 25 ஏப் 2021