மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

இனி இந்த நேரங்களில் மட்டும்தான் வங்கிகள் இயங்கும்!

இனி இந்த நேரங்களில் மட்டும்தான் வங்கிகள் இயங்கும்!

நாளை முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஒரே நாளில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால், கொரோனா பரவல் தீவிரத்தை குறைக்கும் நடவடிக்கையாக நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

இதுகுறித்து இன்று(ஏப்ரல் 25) மாநில வங்கியாளர்கள் குழுமம் வெளியிட்ட அறிக்கையில், “ தமிழகத்தில் நாளை முதல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படும். இந்த உத்தரவு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இந்த நேரங்களில் வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்டோர் ,கர்ப்பிணிகள், பார்வை குறைபாடு, மாற்றுத்திறன் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆதார் பதிவு மற்றும் திருத்தப் பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது. மேலும் ஏடிம்கள் 24 மணி நேரமும் இயங்கும். ஏப்ரல் 30க்கு பிறகு சூழ்நிலையின் அடிப்படையில் மீண்டும் முடிவு செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

ஞாயிறு 25 ஏப் 2021