மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 25 ஏப் 2021

‘யாருக்காக மாஸ்க் போட சொல்றாங்க’: வைரலாகும் வீடியோ!

‘யாருக்காக மாஸ்க் போட சொல்றாங்க’: வைரலாகும் வீடியோ!

தஞ்சாவூரில் முகக்கவசம் அணியாமல் வந்ததற்கு அபராதம் செலுத்த மறுத்து, அதிகாரிகளை அவமரியாதையாகப் பேசிய பெண்ணுக்கு எதிராகவும், அறிவுரை கூறும் விதத்திலும் மற்றொரு பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தி, அபராதம் செலுத்தும்படி கூறினர். விதிமுறையை மீறியதும் இல்லாமல், காவல்துறையினரையும், மாவட்ட ஆட்சியரையும் அந்தப் பெண் அவமரியாதையாகப் பேசியுள்ளார்.

“இத்துனூண்டு மாஸ்குக்கு 200 ரூபாய் அபராதம் கட்ட சொல்றீங்க. உனக்கு அசிங்கமா இல்லையா?” என அந்தப் பெண் பேசியுள்ளார். அதற்கு காவலர், “அதை கலெக்டரிடம் போய் கேளுமா” என கூற, அந்த பெண் “யோவ் கலெக்டரை கூப்பிடு. நானே கேட்கிறேன். யாரா இருந்தாலும் மானத்தை வாங்கிடுவேன்” என மரியாதை இல்லாமல் பேசியிருக்கிறார். இதை போலீஸார் ஒருவர் வீடியோ எடுப்பதைப் பார்த்த அந்தப் பெண், “வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில போடப் போகிறாயா? போடு, நான் ஷேர் பண்றேன், நானும் ரவுடிதான்... ஜெயிலுக்கு அனுப்புறியா அனுப்பு... எனக்கொன்னும் பிரச்சினை இல்ல” என்று திமிராக பேசிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து எஸ்.பி தேஷ்முக்சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில், அந்தப் பெண் மீது பொது இடங்களில் தகாத வார்த்தைகளில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நானும் ரவுடிதான்னு பேசிய பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பெண்மணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உன் சூரதனத்தை ஃபேஸ்புக்கில பார்த்தேன். யாருக்காக போலீஸ்காரர்கள் உயிர கொடுத்து கத்திட்டு இருக்காங்க. எவ்வளவு திமிர் இருந்தா கலெக்டர் ஐயாவ, அவன் இவனு பேசி இருப்ப. அவங்க வீட்டுக்காகவா கத்திட்டு இருக்காங்க… ஒரு உயிர் போகக் கூடாது, ஒரு உயிரின் அவசியத்தை புரிஞ்சுகிட்டு நடவடிக்கை எடுத்து வராங்க. உனக்கு கொரோனா வந்து, மாஸ்க் போடாம நீ விடுற மூச்சுகாத்துல மத்தவங்களுக்கு நோய் பரவி செத்து போயிட கூடாதுடி. உன் ரவுடிதனத்தை என்னை மாதிரி ஆளுங்ககிட்ட வந்து காட்டு. மரியாதையா பேசுடி, இடுப்பு எலும்பை உடைச்சிருவேன். நீங்க வீட்ல நிம்மதியா இருக்கணும்கிறதால, அவங்கவங்க குடும்பத்த விட்டுட்டு வந்து ரோட்டுல நின்னு, மாஸ்க் போடுங்கனு சொல்றது உனக்கு கேனத்தனமா இருக்குதா. உன்கிட்ட 200 ரூபாய் வாங்கிதான் கோடீஸ்வரனா ஆக போறாங்களா……. அப்படி ஃபைன் போட்டானாலும் உயிருக்கு பயந்து மாஸ்க் போடுவீங்கனுதானா ஃபைன் போட்டு இருக்காங்க. போலீஸ்காரங்கள பார்த்த லூசுதனமா இருக்கா. முதல்ல மரியாதையா பேசுடி, அப்புறம் மத்தத பேசிக்கலாம்” என ஆவேசமாகப் பேசியுள்ளார்.

இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

வினிதா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

ஞாயிறு 25 ஏப் 2021