மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

நாளை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

நாளை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்காக நாளை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அதனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப்பட்டது.

ஆனால், நாளை தூய்மை பணியாளர்கள் வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால், பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என மாநகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” முழு ஊரடங்கான நாளை தூய்மைப் பணியாளர்களுக்காக பேருந்துகள் இயக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் 100 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய அடையாள அட்டையுடன் முகக்கவசம் அணிந்து பணியாளர்கள் பயணிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில்களும் நாளை இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

சனி 24 ஏப் 2021