மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

இனி நிலைமை மிக மிக மோசமாகும்!

இனி நிலைமை மிக மிக மோசமாகும்!

இனிவரும் வாரங்களில் கொரோனா பரவல் மிக மிக மோசமாக இருக்கும் என மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனைகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

கடந்த முறை நடந்த விசாரணையின்போது, மக்கள் நோய் தொற்றால் மடிந்து கொண்டிருக்கும் வேளையில், மத்திய அரசின் போக்கு சரியில்லை. உயிர்களை பற்றி கவலையில்லையா, ஆக்சிஜனை பிச்சை எடுங்கள், திருடுங்கள், ஏதாவது செய்து ஆக்சிஜனை கொண்டு வந்து மக்களின் உயிரை காப்பாற்றுங்கள். இது மத்திய அரசின் தார்மீக கடமை என” மத்திய அரசை விளாசியது நீதிமன்றம்.

இந்நிலையில், மீண்டும் இன்று நடந்த வழக்கு விசாரணையின்போது,” ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் செத்து மடிவதை வேடிக்கை பார்க்க முடியாது.இந்த மோசமான சூழலை எதிர்கொள்ள மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.

இதையடுத்து, மத்திய அரசு சார்பில்,, ” வரும் வாரங்களில், கொரோனாவின் இரண்டாவது அலை மிக மிக மோசமாக இருக்கும். மக்களை அச்சப்படுத்துவதற்காக சொல்லவில்லை. ஆனால் இதுதான் உண்மை. வரவிருக்கும் மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். ஆக்சிஜன் சப்ளை உள்ளிட்ட பிரச்சினைகளை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டெல்லி அரசு சார்பில், டெல்லிக்கு 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் தலைநகர் முழுவதும் சீர்குலைந்துவிடும். ஆக்சிஜன் கிடைப்பதை மத்திய அரசு எழுத்துபூர்வமாக உறுதியளிக்க வேண்டும். இந்த பிரச்சனையை கையாள்வதற்காக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வினிதா

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

சனி 24 ஏப் 2021