மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

ஆக்சிஜனுக்கு கலால் வரி இல்லை!

ஆக்சிஜனுக்கு கலால் வரி இல்லை!

ஆக்சிஜன் தயாரிக்க தேவைப்படும் மருத்துவ உபகரணங்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை ரத்து செய்ய பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஆக்சிஜன் கிடைப்பதை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து ஆய்வு செய்ய, இன்று(ஏப்ரல் 24) டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, ”மருத்துவமனைகளிலும், வீட்டிலும் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குவதற்கு, அதன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணபொருட்கள் கிடைப்பதற்கு அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஏற்கனவே ரெம்டெசிவிர் மற்றும் ஏபிஐ ஆகியவற்றிற்கு அடிப்படை கலால் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இவற்றின் இறக்குமதி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று, ஆக்சிஜன் தயாரிப்பு, சேமிப்பு தொடர்பான உபகரணங்கள் இறக்குமதி செய்ய விதிக்கப்படும் கலால் வரி, சுகாதார செஸ் வரி ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்களுக்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு கலால் வரி கிடையாது. இதுகுறித்து வருவாய்த் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியலில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், ஆக்சிஜன் கொண்டு செல்லும் ஐஎஸ்ஓ கண்டெய்னர்கள், ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் கிரையோஜெனிக் சாலை போக்குவரத்து டேங்குகள் உள்ளிட்ட 16 உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஹர்ஷ் வர்தன், பியூஷ் கோயல் மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வினிதா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

சனி 24 ஏப் 2021