மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

அனுமதி மறுப்பு: இதயத்தை நொறுக்கும் காட்சி!

அனுமதி மறுப்பு:  இதயத்தை நொறுக்கும் காட்சி!

குஜராத்தில் மருத்துவமனையில் இடம் அளிக்க மறுப்பு தெரிவித்ததால், கொரோனா பாதிக்கப்பட்ட தனது மகனை சாலையில் படுக்க வைத்துள்ள காட்சி காண்போரின் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க, அதிகரிக்க, மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் நாலாபக்கமும் அலைந்து திரிந்து தங்கள் சொந்த செலவில் வாங்க முயற்சித்தாலும், ஆக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால், மரணங்கள் அதிகரிக்கின்றன. கடைசியில் சுடுகாட்டிலும் இடம் இல்லாததால், சடலங்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்தும், குவியலாக வைத்தும் எரியூட்டப்படும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவிவருவது, இந்தியாவின் அவலநிலையை காட்டுகிறது.

மேலும், ’ஒரு வைரஸ் எப்பேர்ப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தியாவே சான்று’ என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் பேசி, இந்தியாவை மோசமான முன்னுதாரணமாக எடுத்துக்காட்டியுள்ளார்.

சொல்லப்போனால், அதுபோன்ற சம்பவங்கள்தான் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்த மாதிரியான சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது.

சமீபத்தில் சமூகவலைதளங்களில் பரவிய வீடியோ காட்சி ஒன்றில், “குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சார்தாபென், மருத்துவமனைக்கு வெளியே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகனை சாலையில் படுக்க வைத்துவிட்டு, தானும், சாலையில் அமர்ந்து இருக்கிறார். ஆம்புலன்ஸில் வந்தால் மட்டுமே நோயாளிகள் அந்த மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுவார்களாம். இவர்கள் ஆம்புலன்ஸில் வராததால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். அதனால், தன்னுடைய மகனுக்கு பெட் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருவரும் சாலையில் அமர்ந்து இருக்கின்றனர்”.

இந்த வீடியோவை பார்த்த நடிகை ராதிகா ட்விட்டரில்,”, இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. கோபம் வருகிறது, அதே நேரம் எதுவும் செய்ய முடியாத நிலை என்று கூறி கண்ணீர் விடும் எமோஜியை போட்டு ட்வீட் செய்துள்ளார். ராதிகாவின் ட்வீட்டை பார்த்த பலரும், ஆவேசமான கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

குஜராத் அவர் மாநிலமாச்சே. அங்குமா இந்த அவல நிலை என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், பெட் இல்லை, ஆக்சிஜன் இல்லை என்னங்கடா இது, 108 ஆம்புலன்ஸில் வந்தால் தான் அனுமதிப்போம் என்பது சுத்த முட்டாள்தனமாக இருக்கிறது என்றும், உங்களுக்கு ஓட்டு போட்டதா நினைச்சா வெட்கமாக இருக்கிறது என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

வினிதா

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

சனி 24 ஏப் 2021