மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 24 ஏப் 2021

தலைநகர் சீரழிந்துவிடும்: கதறும் டெல்லி அரசு!

தலைநகர் சீரழிந்துவிடும்: கதறும் டெல்லி அரசு!

டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு உடனடியாக ஆக்சிஜன் கிடைக்காவிட்டால், தலைநகர் சீரழிந்துவிடும் என டெல்லி அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லி, ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதி தட்டுப்பாடு காரணமாக அதிகமான உயிரிழப்பு சம்பவங்களை சந்தித்து வருகிறது. கடந்த ஏழு நாட்களாக ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினை டெல்லியில் தலைவிரித்தாடுகிறது. டெல்லியிலுள்ள மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று(ஏப்ரல் 24) நடந்த வழக்கு விசாரணையின்போது, டெல்லி மாநில அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகுல் மெக்ரா ஆஜரானார். அப்போது, ”டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குறைந்து வருவதன் காரணமாக சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகள் வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்.

மத்திய அரசு டெல்லிக்கு கொடுக்கும் ஆக்சிஜன் அளவு 480 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டது. ஆனால் அங்கிருந்து தற்போதுவரை 280 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே கிடைக்கிறது. தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. ஆக்சிஜனுக்காக சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளைத் தான் நம்பியிருக்கிறோம். அதனால், 480 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக கொடுக்காவிட்டால் டெல்லியின் நிலைமை முழுமையாக சீரழிந்துவிடும்.

டெல்லியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியாத சூழல் காரணமாக நாங்கள் வெளிப்பகுதியில் இருந்துதான் ஆக்சிஜன் வாங்கி வருகிறோம். ஆனால் அந்த தனியார் நிறுவனங்களும் சில நேரங்களில் ஆக்சிஜன் கொடுப்பதில்லை. டெல்லி மருத்துவமனைகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும். குறைந்தது 10 ஐஏஎஸ் அதிகாரிகளையாவது ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்சினையை கையாள அரசு நியமிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

”ஆக்சிஜன் தயாரிக்கும் மையத்தை உடனடியாக உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் விநியோகத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் யாராவது ஈடுபட்டால் அவர்களை சும்மா விட மாட்டோம். கடும் நடவடிக்கைகள் பாயும் . ஆக்சிஜன் விநியோகத்தை யார் தடைசெய்தார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தைக் கொடுங்கள், "நாங்கள் அவர்களை தூக்கிலிடுவோம்” என்று நீதிபதிகள் கூறினர்.

வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

சனி 24 ஏப் 2021